சென்னை - திருப்பதி விரைவு ரயில் சேவையில் மாற்றம்


சென்னை: திருப்பதி பணிமனையில் பொறியியல் பணி காரணமாக, சென்னை- திருப்பதி இடையே விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு இன்று முதல் மே 31-ம்தேதி வரை காலை 6.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (16057), ரேணிகுண்டா - திருப்பதி இடையே பகுதி ரத்தாகிறது.

திருப்பதி - சென்னை சென்ட்ரலுக்கு இதே தேதிகளில் மாலை6.05 மணிக்கு புறப்பட வேண்டிய சப்தகிரி விரைவு ரயில் (16058), திருப்பதி - ரேணிகுண்டா இடையேபகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

அதேபோல மதியம் 2.25மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16053), ரேணிகுண்டா - திருப்பதி இடையே பகுதி ரத்தாகிறது. காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்(16054), திருப்பதி- ரேணி குண்டா இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது என சென்னை ரயில்வே கோட்டம் கூறியுள்ளது.