[X] Close
 

100  பந்து ஆட்டங்களில் கவனம் தேவை: எச்சரிக்கும் கங்குலி


need-to-be-careful-about-100-ball-cricket-ganguly

  • kamadenu
  • Posted: 12 May, 2018 15:20 pm
  • அ+ அ-

இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் சார்பாக நடத்தப்படவுள்ள 100 பந்து ஆட்டங்களில் கவனம் தேவை என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகள், 50 ஓவர் போட்டிகள், 20 - 20 ஓவர் போட்டிகள் என கிரிக்கெட் பல பரிணாமங்களை கடந்து வந்துள்ளது. இந்த நிலையில் 100 பந்துகள் மட்டும் வீசப்படும் போட்டிகளை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் அமைப்பினர் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. 

 இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். ,

அதில், “அவர்கள் ஓவர்களை குறிப்பிடாமல் 100 பந்துகள் என்று குறிப்பிட்டு விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்.  
என்ன நடக்கிறது என்று  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், ஒரே வருத்தம் பார்வையாளர்கள் கண் இமைக்கும் நேரத்தில் போட்டி முடிந்துவிடும். 50 ஓவர் போட்டி என்றால்தான் பார்வையாளர்கள் உண்மையான திறமையாளர்களை கண்டறிய முடியும். அதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை நீங்கள் மாலைவரை அதே உத்வேகத்துடன் பேட்டிங் மற்றும் பவுலிங்கை  செய்ய வேண்டும். இதற்கு திறமை மற்றும் நுணுக்கம் தேவைப்படுகிறது. இதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட் இன்றுவரை சவாலானதாக இருக்கிறது. 20 - 20 போட்டிகளை பொருத்தவரை வணிகம் மற்றும் வேடிக்கை சார்ந்தது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

 



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close