[X] Close
 

பிள்ளை பாக்கியம் தரும் சோம அமா பிரதட்சிணம்!


arasamara-vazhipadu-soma-ama-pradhichanam

  • வி.ராம்ஜி
  • Posted: 16 Apr, 2018 10:40 am
  • அ+ அ-

சோம அமா பிரதட்சிணம் செய்தால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கிறது சாஸ்திரம்.

சோம என்றால் திங்கட்கிழமை. அதனால்தான் திங்கட்கிழமையை சோம வாரம் என்கிறோம். சோம அமா என்றால், நேற்றுத் தொடங்கிய அமாவாசை இன்றைக்கும் இருப்பதால், சோம அமா என்று இந்த நாள் சொல்லப்படுகிறது.

இந்த சோம அமா நாளில், அரசமரத்தைச் சுற்றி வந்தால், பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பெண்கள், காலையில் எழுந்து அரசமரத்தை 108 முறை சுற்றி வலம் வரவேண்டும். முடியாதவர்கள் இந்த நாளில் எந்த நேரத்திலாவது அரசமரத்தை மனதாரப் பிரார்த்தித்து பிரதட்சிணமாகச் சுற்றி வரலாம்.

ஒவ்வொரு சுற்றுக்கும் பால் முதலான திரவியங்களை மரத்துக்கு ஊற்றி வழிபடுவது சிறப்பு. அதேபோல், சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், பழங்கள், ஜாக்கெட் பிட் என தங்களால் முடிந்த மங்கலப் பொருட்களை வழங்குவது, மாங்கல்ய பாக்கியத்தையும் தரும்; மாங்கல்ய பலத்தையும் வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

படம் உதவி : எஸ். விஜயலட்சுமி, சென்னை



பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்


பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்
[X] Close