[X] Close
 

2018; கும்ப ராசி; 100க்கு 90 ... வீடு, மனை வாங்குவீங்க!  


2018-vilambi-year-kumbum-rasi-palan

  • kamadenu
  • Posted: 13 Apr, 2018 18:11 pm
  • அ+ அ-

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)

சாதகம்:

சனிபகவானை ராசிநாதனாகக் கொண்டு, சனீஸ்வரனின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே. இந்த ஆண்டு வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ புண்ணியச் சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். எதிரிகளால் இருந்த  தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரயமானது. அந்த நிலை அடியோடு ஒழியும்.

கணவன் மனைவி மற்றும் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். அலுவலகத்தில் சுமுகமான சூழல் உருவாகும். உங்களின் வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். உங்கள் வேலைக்கு உரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள். பணப்புழக்கம் தங்கு தடையின்றி இருக்கும்.  

பாதகம்:

உங்கள் பேச்சைத் திரித்து புரிந்து கொள்ள வாய்ப்புள்ளதால், வெளியில் பேசும்போது அளவாக, ஜாக்கிரதையாகப் பேசுங்கள். நெடுநாளாக  விற்பனை ஆகாமல் இருந்த சொத்துக்கள் சிறிய தாமதத்துக்குப் பிறகே விற்பனையாகும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு தொல்லைகள் வந்தாலும், மருத்துவச் சிகிச்சையால் அனைத்தும் சரியாகிவிடும். சில நேரங்களில் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வாய்ப்பு உண்டு. அவசியமற்ற பொருட்களை வாங்காதீர்கள்.  

மதிப்பெண்கள்: உங்களுக்கு 90% நல்ல பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம்: பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வாருங்கள்.  எல்லா பிரச்சினைகளும் தீரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

சிறப்பு பரிகாரம்: சிதிலம் அடைந்த, வழிபாடு இல்லாத  கோயிலுக்கு உதவி செய்யுங்கள்.

எளிய பரிகாரம்: வீட்டில் தினமும் நான்கு ஒரு முக மண் அகல் விளக்கில்,  இலுப்பை எண்ணெய் விட்டு ஏற்றி, வழிபடுங்கள்.  

நிறங்கள்: மஞ்சள் நிறம் பயன்படுத்துவதன் மூலம் நேர்மறை எண்னங்கள் உருவாகும். மனதில் அமைதி தவழும்.

* உடல் ஆரோக்கியம் மேம்படும்.

* முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படலாம்.

 

 

 

தொடர்புடைய செய்திகள்

 
 



பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்


பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்
[X] Close