[X] Close
 

தேர்தல் முடிவு: ட்விட்டரில் கர்நாடகா எம்.எல்.ஏ.,க்களை கலாய்த்த கேரளா


kerala-tourism-tweets-then-deletes-invite-to-karnataka-mlas-as-parties-hunt-majority

  • kamadenu
  • Posted: 16 May, 2018 11:09 am
  • அ+ அ-

கர்நாடகா தேர்தல் முடிவுகளை சுட்டிக்காடி கேரள மாநில அரசின் சுற்றுலாத் துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ட்வீட் ஒன்று கர்நாடக எம்.எல்.ஏ.,க்களை கலாய்க்கும் வகையில் அமைந்தது. அந்த ட்வீட்டுக்கு கலவையான பின்னூட்டங்கள் வரவே, பின்னர் அந்த ட்வீட்டை சுற்றுலாத் துறை டெலீட் செய்துவிட்டது.

நீக்கப்பட்ட அந்த ட்வீட்:

 

 

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே 15) வெளியாகின. இதில் பாஜக 108 இடங்களில் காங்கிரஸ் 78 இடங்களில் மஜத 38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், கேரள சுற்றுலாத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ட்வீட்டில், "தேர்தல் பரபரப்புகளில் சிக்கி விடுபட்டுள்ள எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்கு அழைக்கிறோம். பாதுகாப்பான, அழகிய ரிசார்டுகளில் தங்கி ரிலாக்ஸ் ஆகுங்கள். வந்து விளையாடுங்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கேரளாவின் அழகிய பேக்வாட்டர் காட்சி அடங்கிய புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது. #KarnatakaVerdict என்ற ஹேஷ்டேக் கீழ் இதனைப் பகிர்ந்திருந்தது.

அந்த ட்வீட்டுக்கு கலவையான பின்னூட்டங்கள் வரவே அந்த ட்வீட்டை சுற்றுலாத் துறை டெலீட் செய்துவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close