[X] Close
 

லட்டு ஊட்டிய ரவிசங்கர்; பலமாக சிரித்த சு.சுவாமி: பாஜக வெற்றியும் தலைவர்கள் கொண்டாட்டமும்


bjp-leaders-celebrate-election-victory

  • பாரதி
  • Posted: 15 May, 2018 13:08 pm
  • அ+ அ-

கர்நாடகா தேர்தலில் கருத்துக் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி பாஜக தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. பெங்களூருவில் டாலர்ஸ் ரோட்டில் உள்ள பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவின் வீட்டின்முன் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். 

2007-ம் ஆண்டுக்குப் பின், கர்நாடக மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தனிப் பெரும்பான்மையை நோக்கி பாஜக நகர்ந்து வருவதால், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 222 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு லட்டு ஊட்டி கர்நாடகா தேர்தல் வெற்றியைக் கொண்டாடினார். இதேபோல், பாஜக வெற்றிக்கு பின்னால் ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

 

இது குறித்து சுப்பிரமணியன் சுவாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, பலமான சிரிப்பை மட்டும் அவர் பதிலாக அளித்தார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

 
 



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close