[X] Close
 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 5 மாதங்களாக வலம் வந்த போலி மருத்துவர்


doctor-in-aiims

  • நெல்லை ஜனா
  • Posted: 17 Apr, 2018 15:42 pm
  • அ+ அ-

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களாக வலம் வந்த போலி மருத்துவர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்த மருத்துவமனை உள்ளதால் பன்னோக்கு சிறப்பு மருத்துவ வசதி வேண்டும் பலரும் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி அடையாள அட்டையுடன் சுற்றி வந்த போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிஹார் மாநிலத்தை சேர்ந்த அட்னன் குர்ரம் (வயது 19)  என்ற அந்த நபர், கடந்த 5 மாதங்களாக மருத்துவர் என்று கூறிக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் வலம் வந்துள்ளார்.

மருத்துவர் போன்று உடையணிந்தும் ஸ்டெதஸ்கோப் அணிந்தும் வந்துள்ளார். மற்ற மருத்துவர்களுடனும், பணியாளர்களுடன் பழகியுள்ள அவரை பார்த்து யாரும் சந்தேகப்படவில்லை. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த பணியாளர்கள் பணியாற்றி வருவதால் இவரை மற்றவர்கள் சந்தேகப்படவில்லை.

மருத்துவர்களுக்காக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டி உட்பட எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றுவதாக கூறி தனது புகைப்படங்களையும் சமூகவலை தளங்களில் பதிவிட்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவர் எனக் கூறி சிலருக்கு அவர் சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து குர்ராம் கைது செய்யப்பட்டார்.

 

தொடர்புடைய செய்திகள்



பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்


பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்
[X] Close