[X] Close
 

எப்போது நீதி கிடைக்கும்?- பிரதமருக்கு ராகுல் கேள்வி


india-wants-to-know-when-rahul-asks-pm

  • பாரதி
  • Posted: 14 Apr, 2018 10:38 am
  • அ+ அ-

கத்துவா, உனாவோ பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து மவுனம் கலைத்த பிரதமர் நரேந்திர மோடி, " என் மகள்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும்" எனக் கூறியிருந்த நிலையில், "எப்போது நீதி கிடைக்கும்" என வினவியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் கடந்த ஜனவரி 10-ம் தேதி 8வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அந்த மாதம் 17-ம் தேதி காட்டுப்பகுதியில் சடலமாக அந்தச் சிறுமி மீட்கப்பட்டார். அதேபோல உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 18 வயது இளம் பெண்ணை பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதில் எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு சம்பவங்களும் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், டெல்லியில், டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவரங்கத்தை திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, "கடந்த இருநாட்களாக நாட்டில் பேசப்பட்டு வரும் துர்பாக்கியமான சம்பவங்கள், அறிவார்ந்த, பன்பட்ட சமூகத்தில் நடந்திருக்க வேண்டிய சம்பவங்கள் இல்லை.

ஒருநாடாக, ஒரு சமூகமாக நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். நான் அனைவருக்கும் உறுதி கூறுகிறேன், தவறு செய்தவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது, முழுமையான நீதிக்கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என் மகள்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும் என்பதை உறுதி கூறுகிறேன்.

இந்த சமூகம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராகவும், பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். இந்த மாற்றம் நம் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்புள்ள பிரதமரே, நீண்ட மவுனத்தை கலைத்தமைக்கு நன்றி. நீங்கள், நமது நாட்டின் மகள்களிக்கு நீதி கிடைக்கும் எனக் கூறினீர்கள்: எப்போது என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவே தெரிந்து கொள்ள விரும்புகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

 
 



பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்


பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்
[X] Close