[X] Close
 

டி20 தொடர்: ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்மில் இலங்கையுடன் நாளை இந்தியா 2-வது மோதல்


india-srilanka-4th-t20-match

  • போத்திராஜ்
  • Posted: 11 Mar, 2018 17:43 pm
  • அ+ அ-

 

நிடாஹாஸ் கோப்பை டி20 தொடரில் கொழும் நகரில் நாளை நடக்கும் 4-வது ஆட்டத்தில்,  இலங்கையை எதிர்கொள்கிறது இந்திய அணி.

­ஃபார்ம் இழந்து தவிக்கும் ரோகித் சர்மா மீண்டும் இயல்பு நிலைக்கு இந்த போட்டியில் வருவது அணியின் வெற்றிக்கு உதவும்.

இதுவரை 2 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணி இலங்கையுடன் முதலாவது போட்டியில் தோல்வியும், வங்கதேசத்துடன் 2-வது போட்டியில் வெற்றியும் அடைந்துள்ளது.

கடந்த 2 போட்டிகளாக பேட்டிங்கில் ஏமாற்றிவரும் ரிஷ்பா பந்த்துக்கு பதிலாக இந்த போட்டியில் கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 49 பந்துகளில் 90 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து பேட்டிங்கில் மிரட்டி வருகிறார்.

தென் ஆப்பிரிக்கத் தொடரில்இருந்து தவனின் பேட்டிங் திறமை மெருகேறிக்கொண்டே வருகிறது. கடைசி 5 டி20 போட்டிகளில் முறையே, 55, 90, 47, 24, 72 ரன்கள் குவித்துள்ளார் தவன் ஆதலால், தொடக்க ஆட்டம் வலுவாக இருக்கிறது.

ஆனால், கேப்டன் ரோகித் சர்மாவின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்கத் தொடரில் இருந்தே ஏதாவது ஒருபோட்டியில் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்கிறார். கடந்த 5 டி20 போட்டிகளில் முறையே 17, 0, 11, 0,21 ரன்கள் மட்டுமே ரோகித் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதலால் இந்த ஆட்டத்தில் இழந்த பேட்டிங் திறனை மீட்பது ரோகித்துக்கு அவசியமாகும்.

நடுவரிசையில் களமிறங்கும் மணீஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்களின் பணியை சிறப்பாக செய்து வருகிறார். 

பந்துவீச்சில் உனத்கத், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், விஜய் சங்கர் ஆகியோரின் பணி விமர்சிக்கும் விதமாக இல்லாமல் சிறப்பாக இருக்கிறது. இவர்களின் கூட்டணி இந்த போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இலங்கையைப் பொறுத்தவரை முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அந்த அணி வங்கதேசத்தின் ரன்வேகத்தை  கட்டுப்படுத்த முடியாமல் தோல்வி கண்டுள்ளது.

குஷால் மெண்டிஸ், குஷால் பெரேரா ஆகியோரின் பேட்டிங் இந்திய அணிக்கு மிரட்டல் விடுக்கிறது. இவர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே வீழ்த்துவது நல்லது.

அணிகள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திரா சாஹல், அக்சர் படேல், விஜய் சங்கர், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ்.

இலங்கை: தினேஷ் சந்திமால் (கேப்டன்), சுரங்கா லக்மல், உபுல் தரங்கா, குணதிலகா, குசால் மெண்டிஸ், தசன் ஷனகா, குசால் ஜெனித் பெரேரா, திஷாரா பெரேரா, ஜீவன் மெண்டிஸ், உதனா, அகிலா தனஞ்ஜெயா, அபோன்சோ, நுவன் பிரதீப், சமீரா, தனஞ்ஜெயா டி சில்வா.

 

தொடர்புடைய செய்திகள்

 
 




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close