[X] Close
 

கிரிக்கெட் மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பில்லை: 100 பந்து போட்டி பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர்


100-ball-cricket-ecb-decision

காலின் க்ரேவ்ஸ் | கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 15 May, 2018 18:21 pm
  • அ+ அ-

இளைஞர்களுக்கு கிரிக்கெட் மீது ஈர்ப்பில்லை என்பதால் தான் தாங்கள் 100 பந்து ஆட்டம் என்ற யோசனையை கையிலெடுத்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் காலின் க்ரேவ்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்து ஆட்டம் என்ற புதிய யோசனையை செயல்படுத்தவுள்ளது. மொத்தம் 15 ஓவர்கள் வீசப்படும் (90 பந்துகள்) பிறகு 10 பந்துகளைக் கொண்ட ஒரு ஓவர் வீசப்படும். இப்படி ஒவ்வொரு தரப்புக்கும் மொத்தம் 100 பந்துகள். டி20 ஆட்டத்தை விட 20 பந்துகள் குறைவாக வீசப்படும் இந்த ஆட்டத்தின் அமைப்புக்கு இதுவரை கலவையான வரவேற்பே கிடைத்துள்ளது.

இது குறித்து பேசிய காலின், "உங்களுக்கு நான் சொல்வது கசக்கிறதோ, இனிக்கிறதோ, ஆனால் இளைய தலைமுறையினருக்கு கிரிக்கெட்டின் மீது ஈர்ப்பில்லை என்பதுதான் உண்மை. நாங்கள் நடத்திய பல்வேறு ஆய்வுகள், கருத்துக்கணிப்புகளின்படி, இளைய தலைமுறையினருக்கு வித்தியாசமாக எதாவது தேவைப்படுகிறது என்பது தெரிந்தது.

அவர்களுக்கு , குறைவான நேரத்தில், அதிக பரபரப்பும், ஆட்டம் புரிந்துகொள்ள எளிதாகவும் இருக்க வேண்டும். இதை நாங்கள் தெரிந்துகொண்டுள்ளோம். அதைத் தான் செயல்படுத்தப் போகிறோம். இந்த முறை போட்டியை கட்டமைப்போம். வீரர்களுடன் இணைந்து செயல்படுவோம். ஏனென்றால் அவர்களது ஈடுபாடும் அவசியம். 

வீரர்கள் பார்வையிலிருந்து பார்த்தால், கவுன்ட்டியில் விளையாடுபவர்களுக்குக் 8 மில்லியன் பவுண்டுகள் வரை கூடுதல் சம்பளம் கிடைக்கும். இந்த 100 பந்து தொடர் அந்த வருமானத்தை பெற்றுத் தரும்" என்று காலின் க்ரேவ்ஸ் கூறியுள்ளார். 

முன்னதாக, 100 பந்து கிரிக்கெட் போட்டி நடத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

-ஐஏஎன்எஸ்



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close