[X] Close
 

நாம் திரும்பி வந்துவிட்டோம்: கண்ணீர் விட்ட தோனி


ms-dhoni-gets-emotional-while-speaking-on-chennai-super-kings-return

  • இந்து குணசேகர்
  • Posted: 30 Mar, 2018 16:48 pm
  • அ+ அ-

இரண்டு ஆண்டு தடைகளுக்கு பின்னர் மீண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுவது குறித்து தோனி உணர்வுப்பூர்வமாக பேசி இருக்கிறார். 

ஐபிஎல் 2018 ஆம் ஆண்டுக்கான சீசன் வரும் ஏப்ரல் தேதி தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே வீரர்கள் விளம்பரங்கள் மற்றும் போட்டோ ஷூட்களில் பங்கேற்று வருகின்றனர். 

இந்த நிலையில் சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தோனி உணர்வுப்பூர்வமாக பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 


அதில் தோனி இது மிக உணர்வுப்பூர்வமான தருணம். நான் 20 -20 போட்டிகளில் இந்திய அணி, ஜார்கண்ட் அணிகளுக்கான தலைமை ஏற்று வழி நடத்தி இருக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 8 வருடமாக கேப்டனாக இருந்திருக்கிறேன். என்னை மஞ்சள் நிற ஆடையில் காணாமல் இருந்தது எனக்கு உணர்ச்சிகரமான தருணமாகதான் இருந்தது. 

நாங்கள் எல்லாவற்றையும் கடத்து வந்துவிட்டோம்.... ஆனால் அடுத்து என்ன என்பது நமது எது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுதான். நாம் திரும்ப வந்துவிட்டோம். நாம் திரும்ப வந்துவிட்டோம்” கண்ணீர்விட்டபடி பேசினார். 


உடனடியாக சென்னை சூப்பர் கிங்ஸின் சக வீரரான சுரேஷ் ரெய்னா ஓடி வந்து தோனிக்கு தண்ணீர் வழங்கினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

 

 

 

வீடியோவை பார்க்க கீழே க்ளிக் செய்யவும்
 

தொடர்புடைய செய்திகள்

 
 




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close