[X] Close
 

ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு தடை: ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதிரடி


steve-smith-david-warner-banned-for-12-months

  • போத்திராஜ்
  • Posted: 28 Mar, 2018 14:33 pm
  • அ+ அ-

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு  கிரிக்கெட்  விளையாட ஒரு ஆண்டு தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பந்தை திட்டமிட்டு சேதப்படுத்தினோம் என்பதை ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத்தடையும், போட்டி ஊதியத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக செலுத்த ஐசிசி உத்தரவிட்டது. மேலும், துணைக் கேப்டன் வார்னருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்தது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கொதித்துப் போன ஆஸ்திரேலிய நாட்டு அரசு, ஸ்மித், வார்னர் இருவரின் கேப்டன் பதவிகளையும் பறித்து தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்தும் நீக்கியது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து உடனடியாக ஸ்மித், பான்கிராப்ட், வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலியா புறப்பட நேற்று இரவு கிரிக்கெட் ஆஸ்திரேலியா சிஇஓ ஜேம்ஸ் சதர்லாந்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பான்கிராப்ட் ஆகியோருக்கான தண்டனையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

அதன்படி, ஸ்டீவ் ஸ்மித் அடுத்த ஒரு ஆண்டுக்கு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது. அதோடு இருவரும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்தவிதமான கேப்டன்  பொறுப்புகளையும் ஏற்கக் கூடாது.

பந்தைசேதப்படுத்தி கேமிராவில் சிக்கிய கேமரூன் பான்கிராப்ட் 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படுகிறது இவ்வாறு அவர் அறிவித்தார்.

2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட், ஆஷஸ்  போட்டிக்கு முன்பாக ஸ்மித், வார்னருக்கு தடை முடிந்துவிடும். அதேசமயம், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஸ்மித்,வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் இடம் பெறமுடியாது.

 

 

தொடர்புடைய செய்திகள்

 



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close