[X] Close
 

400 ஆண்டு கால சாபம்!- தவிக்கும் ம.பி. கிராமம்


a-village-where-no-woman-has-given-birth-in-400-years

  • பாரதி
  • Posted: 11 May, 2018 16:20 pm
  • அ+ அ-

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ளது சங்க ஷ்யாம் ஜி என்ற கிராமம். இந்த கிராமத்தில் 400 ஆண்டுகளாக விநோதமான ஒரு பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கிராமத்தில் பிரசவிக்க அனுமதியில்லை. ஊருக்கு வெளியே ஒரு கட்டிடம் உள்ளது. ஒன்று அங்கு பிரசவம் பார்க்கப்படும் இல்லாவிட்டால் கிராமத்துக்கு வெளியே உள்ள மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்படும்.

இது குறித்து அந்த கிராமத்தின் தலைவர் நரேந்திர குஜ்ஜார் கூறும்போது, "90% பிரசவங்கள் கிராமத்துக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் நடக்கிறது. சில நேரங்களில் அவசரம் ஏதுமென்றால் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் பிரசவம் பார்க்கப்படுகிறது.

எங்கள் ஊரின் மீது ஒரு சாபம் இருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் இங்கு ஒரு கோயிலை கட்டியுள்ளனர். கோயில் கட்டுமானப் பணி நடந்தபோது பெண் ஒருவர் அவர் வீட்டில் திருகையில் கோதுமை அரைத்துள்ளார். அந்த சத்தமானது கோயில் கட்டுமானத்தில் இருந்தவர்கள் கவனத்தை சிதற்ச் செய்துள்ளது. இதனால், இந்த ஊர் மீது கடவுள் சாபமிட்டார். இந்த ஊரில் பெண்கள் பிரசவம் நடக்கக்கூடாது என சாபம் விழுந்தது. அன்றிலிருந்து இன்றுவரை நாங்கள் ஊருக்குள் பிரசவம் நடக்காமல் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வருகிறோம்.

ஒருவேளை தப்பித்தவறி ஊருக்குள் பிரசவம் நடந்துவிட்டால் தாயோ சேயோ இறக்க நேரிடுகிறது. அல்லது குழந்தை உடல் குறைபாட்டுகளுடன் பிறக்கிறது" என்றார்.

விண்வெளிக்கு ராக்கெட்டுகளை ஏவும் காலத்தில்தான் சாபம் பாவம் எனக் கூறி கர்ப்பிணிப் பெண்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் செயல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஊரில் ஒரே ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது, அங்கு யாருமே மது அருந்துவது இல்லையாம்.
 

தொடர்புடைய செய்திகள்




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close