[X] Close
 

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BabyMirzaMalik: சானியாவுக்கு குவியும் வாழ்த்துகள்


sania-mirza-shoaib-malik-share-cryptic-baby-post

  • பாரதி
  • Posted: 23 Apr, 2018 18:04 pm
  • அ+ அ-

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ள #BabyMirzaMalik ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது. டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், சானியா மிர்சா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சூசகமாக தெரிவித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சோயப்புடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். 
சானியா அவரது ட்விட்டர் பக்கத்தில்  #BabyMirzaMalik என்றும் சோயப் அவரது ட்விட்டர் பக்கத்தில் #MirzaMalik என்ற ஹேஷ்டேகையும் பதிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து சானியா - சோயப் தம்பதிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close