[X] Close
 

பெண்கள் தலைமுடியை விரித்துப்போட்டு வரத் தடை: பெங்களூரு கோயில் திடீர் கட்டுப்பாடு


bengaluru-rr-nagar-temple-says-no-to-jeans-shorts-sleeveless-tops

  • போத்திராஜ்
  • Posted: 11 Apr, 2018 12:09 pm
  • அ+ அ-

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பெண்கள் தலைமுடியை விரித்துப் போட்டு வர கோயில் நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பெண்கள், ஆண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியவும், டிசர்ட், மினி ஸ்கர்ட் உள்ளிட்ட நாகரீக ஆடைகளை அணிந்து வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

பெங்களூரில் உள்ள ஆர் ஆர் நகரில் புகழ்பெற்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யவரும், ஆண்கள், பெண்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, பெண்கள் தலைமுடியை விரித்துப்போட்டு கோயிலுக்கு வரக்கூடாது, தலையை நன்றாக வாரி அல்லது கிளிப் மூலம் இருக்கமாக முடிந்து வர வேண்டும். பெண்கள் ஜூன்ஸ், மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லஸ் டாப்ஸ் உள்ளிட்ட நாகரீக ஆடைகளை அணிந்துவரக்கூடாது. மாறாக, சுடிதார், சல்வார், சேலை அணிந்துதான் கோயிலுக்கு வரவேண்டும் சென்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, ஆண்கள் ஜீன்ஸ்பேண்ட் அணியவும், டிசர்ட், சார்ட்ஸ், குட்டையான சட்டைகள், டிசர்ட் ஆகியவை அணியவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வேட்டி, சாதாரண பேண்ட், சட்டை ஆகியவை மட்டுமே ஆண்கள் அணிந்து கோயிலுக்கு வரவேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு இருந்துவருகிறது. ஆனால், இதை சரிவர அமல்படுத்தப்படவில்லை. இப்போது தீவிரப்படுத்தி இருக்கிறோம். இது தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நாங்கள் அறிவிப்பு செய்து வருகிறோம். இந்த உத்தரவுகளை மீறி பக்தர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோயிலின் இந்த திடீர் கட்டுப்பாடுகள் பக்தர்களில் ஒருபிரிவினர் மத்தியில் பெரும் அதிருப்தி உருவாகியுள்ளது. ஜே.பி. நகரைச் சேர்ந்த தனஞ்சயா பத்மநாபச்சார் கூறுகையில், நாம் இப்போது வாழ்வது பெண்களும், ஆண்களும் சரிசமமான உரிமைவழங்கும் காலத்தில் இருக்கிறோம். அப்படி இருக்கும் போது, பெண்களுக்கு ஒருவிதமான ஆடையும், ஆண்களுக்கு ஒருவிதமான ஆடையும் அணிந்து கோயிலுக்கு வர வேண்டும் என கட்டளையிட முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 
மற்றொரு பிரிவினரோ ஆடைக்கட்டுப்பாடு என்பது அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களிலும் இருக்கிறது. அவர்கள் கட்டுப்பட்பாட்டுடன் இருக்கும் ஏன் நாம் இருக்க கூடாது என்று மற்றொரு சாரர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

 




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close