[X] Close
 

பிரதமரின் உடல் உறுதிக்கும் மன அமைதிக்கும் காரணம் பாதஹஸ்தாசனா: அட அவரே சொல்றாருங்க


benefits-of-padahastasana-as-described-by-pm-modi

  • பாரதி
  • Posted: 10 Apr, 2018 16:53 pm
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியின் உடல் ஆரோக்கியத்துக்கும் மன அமைதிக்கும் காரணம் பாதஹஸ்தனா. அத எப்படித் தெரியும் என்கிறீர்களா? அவரே சொல்லியிருக்கார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோவும் போட்டிருக்கிறார். அதில் மோடி போன்ற அனிமேஷன் கேரக்டர் பாதஹஸ்தனா செய்வது எப்படி என்ற விளக்கம் தர அதற்குக் கீழ் பிரதமர் ட்வீட் செய்திருக்கிறார்.

அதில், "பாதஹஸ்தாசனா செய்வதை உங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொண்டால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மனம் அமைதியா இருக்கும். இதைவிட வேறு என்ன வேண்டும்.

பாதம் என்றால் கால்பாதம் ஹஸ்தம் என்றால் கைகள், ஆசனா என்றால் ஆசனம். பாதஹஸ்தாசனம் செய்வதால் வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற சதை நீங்குவதுடன் உங்கள் முதுகுத் தண்டுவடமும் உறுதியாக இருக்கும்" என்ற விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.

மன அழுத்தமின்றி வாழ யோகா செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அவரது பதவியின் ஆரம்பக்காலம் முதலே கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

 
 



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close