[X] Close
 

நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 7, நோக்கியா 8 சிரோக்கோ இந்தியாவில் அறிமுகம்.. சிறப்பம்சங்கள் என்னென்ன?


nokia-8-sirocco-nokia-7-plus-nokia-6-2018-launched-in-india-price-specifications

  • பாரதி
  • Posted: 04 Apr, 2018 17:32 pm
  • அ+ அ-

நோக்கியா செல்ஃபோன்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள, எச்எம்டி க்ளோபல் நிறுவனம், இந்தியாவில் அதன் நோக்கியா 6 (2018), நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் இந்திய விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு..

நோக்கியா 6 (2018):
நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் விலை ரூ.16,999/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 5.5 அங்குல HD டிஸ்ப்ளே, 2.5D கொரில்லா கிளாஸ், ஸ்னாப்டிராகன் 630 பிராசஸ்ஸர் உள்ளது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு (ஸ்டோரேஜ்), 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வகையில் கிடைக்கிறது. இதில் 16 மெகா பிக்சல் செய்ஸ் ஆப்டிக்ஸ் ரியர் கேமரா,  8 எம்பி செல்ஃபி கேமரா, போத்தி எனப்படும் இருபுறமும் ஃபோட்டோ எடுக்கும் ஆப்ஷன் உள்ளன. ஓஸோ ஆடியோ தொழில்நுட்பம் உட்பொதிக்கப்பட்ட மைக் உள்ளது. 3,000mAh பேட்டரியும் உள்ளது.

நோக்கியா 7 பிளஸ்: 
நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.25,999/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 6 அங்குல முழு HD டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸ்ஸர் உள்ளன.
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு (எக்ஸ்பாண்டபிள் ஸ்டோரேஜ்) உள்ளது.
டூயல் ரியர் கேமரா உள்ளது. ஒன்று 12 மெகா பிக்சல் திறன், மற்றொன்று 13 மெகா பிக்சல் திறன் கொண்டது. செல்ஃபி எடுப்பதற்கு என்று ஒரு 16 எம்.பி செய்ஸ் லென்ஸ் கேமரா உள்ளது. 3800mAh பேட்டரி உள்ளது. இரண்டு நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் எனக் கூறப்படுகிறது.

நோக்கியா 8 சிரோக்கோ: 
நோக்கியா 8 சிராக்கோ விலை ரூ.49,999/ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 முதல் விற்பனை தொடங்குகிறது. ஏப்ரல் 20-ல் இருந்து இந்த போனை வாங்க முன்பதிவு செய்யலாம். 
5.5 இன்ச் பி-ஓஎல்இடி டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ், ஸ்னாப்டிராகன் 835 பிராசஸ்ஸர் உள்ளன. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. 12 மெகாபிக்சல், 13 மெகாபிக்சல் திறன் கொண்ட டூயல் ரியர் கேமரா உள்ளது. 3260mAh பேட்டரி உள்ளது. 5 எம்.பி. செல்ஃபி கேமரா உள்ளது.

தொடர்புடைய செய்திகள்




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close