[X] Close
 

யார் இந்த தீபக் கோச்சார்?


who-is-deepak-kochhar

  • பாரதி
  • Posted: 03 Apr, 2018 12:04 pm
  • அ+ அ-

திடீரென்று செய்திகளில், இணையதளங்களில், சமூகவலைத்தளங்களில் சில பெயர்கள் பிரபலமாகிவிடும். அப்படி கடந்த 4,5 தினங்களாக பிரபலமாகிவரும் பெயர்தான் தீபக் கோச்சார்.

ஐசிஐசிஐ வங்கியின் எம்.டி.யும் தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சாரின் கணவர் தான் இந்த தீபக் கோச்சார். நல்ல விஷயம் தானே அது என யோசிக்கிறீர்களா?

விஷயம் அதுவல்ல. தீபக் கோச்சாரின் நூபவர் பிரைவேட் லிமிடட் (NuPower Renewables Pvt. Ltd.,) நிறுவனம் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளதே இவர் திடீரென செய்திகளில் அடிபடக் காரணம்.

ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து சமீபத்தில் ரூ.3250 கோடி கடன் பெற்ற வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத்திடமிருந்து தீபக் கோச்சார் ரூ.64 கோடி பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதன் காரணமாக இவா
இந்நிறுவனம் கடந்த 2008 டிசம்பரில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது இந்நிறுவனம் தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 700 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட தொழிற்சாலைகள் வைத்துள்ளது.

மேலும் நுபவர் அலுவலகம் மும்பையில் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பந்த்ரா குர்லா வணிக வளாகத்திலேயே அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close