[X] Close
 

ஆட்டம், பாட்டம், டிஜே இருந்தால் நிக்காஹ் கிடையாது: உ.பி, முஸ்லிம் காஜி கெடுபிடி


we-will-not-conduct-nikah-in-weddings-where-music-and-dance-is-happening

  • பாரதி
  • Posted: 02 Apr, 2018 12:07 pm
  • அ+ அ-

திருமண வைபவத்தின்போது பாட்டுக் கச்சேரி, டி.ஜே.,க்கள் மூலம் நடன ஒருங்கிணைப்பு ஆகியனவற்றை மேற்கொண்டால் அந்த திருமணத்தை முன்நின்று நடத்திவைக்க முடியாது என உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காஜிக்கள் கூட்டமைப்பு கெடுபிடி விதித்துள்ளது.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் காஜி முஃப்தி அசார் ஹுசைன் கூறும்போது, "முஸ்லிம்கள் தங்கள் வீட்டுத் திருமண நிகழ்ச்சிகளில் பாட்டுக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தாலோ, டி.ஜே.,க்கள் மூலம் நடன ஒருங்கிணைப்பு செய்தாலோ அவர்கள் இல்லத் திருமண விழாவை முன்நின்று நடத்த மாட்டோம். இஸ்லாம் மதத்தின்படி இத்தகைய இசை, நடனங்கள் ஏற்கத்தக்கதல்ல. எனவே, இதை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்" எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் முஸ்லிம்கள் இல்லத் திருமண நிகழ்வுகளில் இசை, நடனத்துக்கு காஜிக்கள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close