[X] Close
 

பாலியல் பலாத்காரர்களை நடுரோட்டில் சுட்டுத்தள்ள வேண்டும்: பாஜக எம்.பி. ஆவேசம்


rapists-must-be-shot-dead-in-public-bjp-mp

  • பாரதி
  • Posted: 29 Mar, 2018 10:42 am
  • அ+ அ-

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுத்தள்ள வேண்டும் என அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி., ஆர்.பி.சர்மா கூறியுள்ளார். 

அண்மையில் அஸ்ஸாம் மாநிலம் போர்டுவா பகுதியில் 5 வயது சிறுமியை 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு சிறுமியை எரித்துக் கொலை செய்தனர்.

இதனைச் சுட்டிக் காட்டிய எம்.பி. சர்மா, பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்கொடுமைகளில் ஈடுபடுவோரை பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுத்தள்ள வேண்டும். இத்தகைய குற்றங்களைத் தடுக்க இதுவே வழி" என அவர் கூறியுள்ளார்.

அவரது இந்த கருத்து வாதவிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 

-ஏஎன்ஐ

தொடர்புடைய செய்திகள்

 
 




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close