[X] Close
 

பீமாராவ் 'ராம்ஜி' அம்பேத்கர் ஆகிறார் டாக்டர் பீமராவ் அம்பேத்கர்: உ.பி. அரசு ஆணை


ramji-to-be-part-of-ambedkar-s-name

  • பாரதி
  • Posted: 29 Mar, 2018 10:03 am
  • அ+ அ-

உத்தரப் பிரதேசத்தில் அரசு ஆவணங்களில் அம்பேத்கர் பெயரில் 'ராம்ஜி' என்ற வார்த்தையை சேர்க்க ஆணை பிறக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச ஆளுநர் ராம்நாயக் பரிந்துரையின்பேரில் இந்த உத்தரவை பிறப்பித்து யோகி ஆதித்யநாத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி இனி டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் என்பதை டாக்டர் பீமாராவ் 'ராம்ஜி' அம்பேத்கர் என மாற்ற உத்தரப் பிரதேச அரசு ஆணை பிறப்பித்துள்ளது. லக்னோ, அலகாபாத் நீதிமன்றங்களுக்கும் ராம்ஜி என்ற பெயரை அதிகாரபூர்வமாக சேர்க்க உ.பி. அரசு ஆணையிட்டுள்ளது.

இதற்கு விளக்கமாக இந்திய அரசியல் சாசனப் பக்கங்களில் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார் என்று அரசு கூறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close