[X] Close
 

2020-ல் இந்தியாவில் நாளொன்றுக்கு 775.5 டன் மருத்துவக் கழிவுகள் குவியும்: ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட் 


india-likely-to-generate-775-5-tonnes-of-medical-waste-daily-by-2020

  • பாரதி
  • Posted: 23 Mar, 2018 12:51 pm
  • அ+ அ-

2020-ல் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 775.5 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகும் என அசோசெம் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இதுதொடர்பான ஆய்வில், இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவக் கழிவுகள் 7% ஆக அதிகரிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. 


இந்தியாவில் 2002-ம் ஆண்டில் மருத்துவக் கழிவுகள் மேலாண்மை தொழிலின் சந்தை மதிப்பு பில்லியனாக 13.62 அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொழிலாக மருத்துவக் கழிவு மேலாண்மை இருக்கும் நிலையில், மருத்துவக் கழிவுகள் எப்படிப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வு இன்னும் இல்லை. 


தரமற்ற முறையில் மருத்துவக் கழிவுகளைக் கையாண்டால் எத்தகைய பின் விளைவுகள் எல்லாம் ஏற்படக்கூடும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். 


என்ன நடக்கும்? 
மருத்துவக் கழிவுகளை நாம் மிகவும் மோசமாகக் கையாளும்போது சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பதோடு, எலி, பூச்சிகள் போன்றவற்றின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன் மூலம் டைபாய்டு, காலரா போன்ற நோய்களும் குப்பையில் வீசப்பட்ட ஊசிகளால் ஹெபாடிடிஸ், எய்ட்ஸ் போன்ற நோய்களும் உருவாகும். 


வளரும் நாடுகளில், மருத்துவக் கழிவு மேலாண்மை என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. எனவே, மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் உள்ள வழிமுறைகளைச் சரியாக பின்பற்றுவதுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 
 



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close