[X] Close
 

ஹாட் லீக்ஸ்: சர்ச்சைக்குள் சிக்கிய துர்கா ஸ்டாலின் அண்ணன்!


durga-stalin-brother

  • kamadenu
  • Posted: 10 May, 2018 08:16 am
  • அ+ அ-

மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவின் அண்ணன் ராஜமூர்த்தி. அரசு மருத்துவரான இவர், தற்போது நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் பணியாற்றுகிறார். இந்த நிலையில், தன்னை மாவட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் தொகுதி எம்.எல்.ஏ. பவுன்ராஜும் பணிசெய்ய விடாமல் இடையூறு செய்வதாகவும் அதனால் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி கடந்த வாரம் திடீரென மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனார் ராஜமூர்த்தி. இப்போது இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுள்ளது. ராஜமூர்த்திக்கு ஆதரவாக திமுகவினரும், அவருக்கு எதிராக அதிமுகவினரும் சமூக வலைதளங்களில் சண்டைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

 
 



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close