[X] Close
 

ஹாட் லீக்ஸ்: அரசியலுக்கு முழுக்குப்போட்ட ராதிகா செல்வி!


radhika-selvi-quits-politics

  • kamadenu
  • Posted: 04 May, 2018 10:16 am
  • அ+ அ-

கடந்த 2003 அதிமுக ஆட்சியில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் அகில இந்திய நாடார் பேரவைத் தலைவர் வெங்கடேச பண்ணையார். இதைத் தொடர்ந்து 2004 நாடாளு மன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி, தேர்தலில் வெற்றிபெற்று உள்துறை இணை அமைச்சரும் ஆனார்.

ஆனால், அடுத்த தேர்தலில் அவருக்கு திமுக சீட் கொடுக்கவில்லை. அத்துடன் அரசியலைவிட்டு விலக ஆரம்பித்த ராதிகா செல்வி, இப்போது முற்றிலுமாக ஒதுங்கி சென்னையில் செட்டிலாகிவிட்டார். எப்போதாவது ஊர்ப்பக்கம் வந்து போகிறார். பண்ணையார் காலத்துப் பகை நிழல் எதுவும் தன் மீது படிந்துவிடாதபடி, மகனை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவதில்தான் இப்போது அவரது முழு கவனமும்!  

தொடர்புடைய செய்திகள்

 
 



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close