[X] Close
 

இனிக்க, மணக்க, கேழ்வரகு தோசை


kezhvaragu-dosai

  • kamadenu
  • Posted: 20 Apr, 2018 14:16 pm
  • அ+ அ-

உணவே மருந்து என்று சொல்வார்கள். வாய்க்கு ருசியாக இருக்கும் உணவு வகைகள் எல்லாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்று சொல்ல முடியாது. நாவுக்கு ருசியாகவும் அதேவேளையில் வயிற்றுக்கு இனிய உணவாகவும் இருக்கவேண்டும். 

கேழ்வரகு இனிப்பு தோசை

என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு 1 கப்

அரிசி மாவு 1 கப்

ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்

இந்து உப்பு- தேவையான அளவு

வெல்லம் தூளாக்கியது 1 ½ கப்

எண்ணெய் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கேழ்வரகு மாவு, அரிசி மாவு, வெல்லம், உப்பு, ஏலக்காய் பொடி ஆகியவற்றைச் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலந்து ½ மணி நேரம் ஊறவிடவும். தோசைக்கல் சூடானதும் மாவைத் தோசையாக வார்த்துச் சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும். இதற்கு அசத்தலான காம்பினேஷன் தக்காளி சட்னிதான். இரும்புச் சத்து நிறைந்தது.




 

தொடர்புடைய செய்திகள்

 
 




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close