[X] Close
 

அமெரிக்காவில் இன்போஸிஸ் தொழில்நுட்ப மையம்: 1000 அமெரிக்கர்களுக்கு வேலை


infosys-to-open-tech-hub-in-us

  • kamadenu
  • Posted: 15 Mar, 2018 11:56 am
  • அ+ அ-

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் விரைவில் தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு மையம் ஒன்றைத் தொடங்க உள்ளதாக உலக மென்பொருள்நிறுவனமான இன்போஸிஸ் அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் தலைமை அதிகாரி இன்று (வியாழக்கிழமை) இதுகுறித்து தெரிவிக்கையில்,

கனெக்டிகட்டில் ஹார்போர்டில் எங்கள் அடுத்த தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு மையம் திறக்கப்படும், 2022 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 1,000 அமெரிக்கஊழியர்கள் வேலைக்கு அமர்த்துவோம்.

கனெக்டிகட்டில் தொடங்கப்படும் மையம் காப்பீட்டையும், சுகாதாரத்தையும், உற்பத்திகளையும் நிறுவனத்திற்காக, கிழக்கு மாகாணம் வாடிக்கையாளர்களுக்குகொண்டு வருவதோடு அதன் இன்சூரெக் மற்றும் ஹீத் டெக் முயற்சிகளுக்கான உலகளாவிய மையமாகவும் செயல்படும்.

"கனெக்டிகட்டில் முதலீடு என்பது அமெரிக்க நிறுவனத்திற்கான கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்துவதன் அவசியத்தின் ஒரு பகுதியாகும், உள்ளூர்திறமைசாலிகளை மேம்படுத்துவதோடு சந்தையில் ஏற்படும் திறன் இடைவெளிகளை சுருக்கவும் இதன் செயல்பாடுகள் அமையும்" என்று ஓர் அறிக்கையில் அறிக்கை அவர் உறுதிபடுத்தியுள்ளார்.


 

தொடர்புடைய செய்திகள்

 
 




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close