[X] Close
 

சாம்சங் கேலக்ஸி எஸ்9, எஸ்9+ - புதிய ப்ரீமியம் போன்கள் முழு விவரம்


samsung-galaxy-s9-s9-full-specifications

  • Team
  • Posted: 06 Mar, 2018 15:27 pm
  • அ+ அ-

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.57,900.
சில நாட்களுக்கு முன்பு ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொபைல்கள் தற்போது இந்திய சந்தையிலும் அறிமுகமாகியுள்ளது. ஸ்லோ மோஷன் வீடியோ, இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் என பல அம்சங்களைக் கொண்டுள்ளது. 

இதில் எஸ்9 மாடலில் 64 ஜிபி மொபைல் ரூ. 57,900 என்றும் 256 ஜிபி மொபைல்  ரூ. 65,900 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்9+ மாடலின் 64 ஜிபி மொபைல் ரூ. 64,900 என்றும்,  256 ஜிபி மொபைல் ரூ.72,900 என்றும் என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 16 முதல் கடைகளில் கிடைக்கும். 

எஸ்9 மாடல் 5.8இன்ச் டிஸ்ப்ளே, 4ஜிபி ராம், 12 மெகாபிக்ஸல் பின் பக்க கேமரா மற்றும் 8 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா, 3000 எம்ஏஹெச் பேட்டரியுடன் வருகிறது. 

எஸ்9+ மாடல் 6.2இன்ச் டிஸ்ப்ளே, 6ஜிபி ராம், 12 மெகாபிக்ஸல் பின் பக்க கேமரா மற்றும்  முன்பக்க கேமரா, 3,500 எம்ஏஹெச் பேட்டரியுடன் வருகிறது. இரண்டு மாடல்களிலும் கூடுதலாக மெமரி கார்ட் உதவியுடன் 400 ஜிபி வரை கொள்ளளவை அதிகமாக்கிக் கொள்ளலாம். 

ப்ரீமியம் மொபைல்கள் என்று சொல்லப்பட்டும் அதிக வசதிகள் மற்றும் அதிக விலை கொண்ட போன்களைப் பொருத்தவரையில், ஆப்பிள், ஒன்ப்ளஸ் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவங்களின் தயாரிப்புகளே 94 சதவித (ப்ரீமியம் மொபைல்) சந்தையை கைக்குள் வைத்திருக்கிறது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close