[X] Close
 

பல கோடிக்கு ஏலம் போன போப் பிரான்சிஸின் ‘லம்போர்கினி’ கார்


pope-francis-custom-lamborghini-huraca

  • நெல்லை ஜனா
  • Posted: 13 May, 2018 17:56 pm
  • அ+ அ-

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸூக்கு, கஸ்டம் மேட் லம்போர்கினி ஹரிகேன் ஆர்டபிள்யூடி கார், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்நிறுவனத்தின் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. பரிசை ஏற்றுக் கொண்ட போப் பிரான்சிஸ் காரில் கையெழுத்திட்டிருந்தார்.

போப் பிரான்டிஸ் பயன்படுத்தி வந்த லம்போர்கினி ஹரிகேன் மாடல் பியான்கோ மொனோசிரஸ்  வெள்ளை நிறம் கொண்டது, இதில் கியாலோ டிபெரினோ ஸ்டிரைப்கள் மற்றும் வேட்டிக்கன் நகர கொடிகளை தழுவிய நிறங்களில் டீடெயிலிங் செய்யப்பட்டது.

இந்த கார் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்நிலையில், இந்த காரை ஏலத்தில் விட்டு அதில் இருந்து வரும் தொகையை நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த முடிவ செய்யப்பட்டது. அதன்படி, மான்ட் கார்லோவில் மே 12-ம் தேதி , ஆர்எம் சேத்பி நிறுவனம் ஏலம் நடத்தியது.

வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை ஏலம் விடுவதில் தனித்துவம் வாய்ந்த இந்த நிறுவனம் போப் பிரான்சிஸின் லம்போர்கினி காரையும் ஏலத்தில் விட்டது. இந்த கார் சுமார் 5.80 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த பணம், ஏழை மக்களின் நல உதவிக்கு பயன்படுத்தப்பட உள்ளது.



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close