[X] Close
 

ரூ.50 கோடிக்கு மேலான வாராக்கடன்களுக்கு ஆய்வு தேவை : ஃபிக்கி கருத்து


ficci-about-loan-frauds

  • Team
  • Posted: 01 Mar, 2018 05:25 am
  • அ+ அ-

மோசடி செய்பவர்கள் மற்றும் கடனை வேண்டுமென்றே கட்டாமல் இருப்பவர்களைக் கண்டறியும் பொருட்டு ரூ.50 கோடிக்கு மேலான வாராக்கடன்களை ஆய்வு செய்யுமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை அமைப்பை சரிசெய்வதோடு வெளிப்படையான இடர் மேலா ண்மைக்கும் வழிவகுக்கும். இது தேவையான நடவடிக்கை என ஃபிக்கி அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நடவடிக்கையை கவனமாக மேற்கொள்ளவேண்டும் என்றும் ஃபிக்கி கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் கடன் பெறுவதில் சிக்கல்களோ, வணிக பாதிப்புகளோ ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஃபிக்கியின் தலைவர் ராஜேஷ் ஷா, அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் தொடர் நடவடி க்கைகள் பொதுத்துறை வங்கி கள் தங்களது இடர் மேலாண்மையை உடனடியாக உறுதியாக்க உதவும் என்றார். இருப்பினும் வங்கிகளை தனியார் மயமாக்குவது இந்தப் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருக்கும் நிலையில் நிதி அமைச்சகம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது - பிடிஐ




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close