[X] Close
 

தெரிந்து கொள்ளுங்கள்… ஏப்ரல்-1 முதல் வரிவிதிப்பில் என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது?


budget-2018-proposals-to-be-implemented-from-april-1-how-it-impacts-you

  • போத்திராஜ்
  • Posted: 31 Mar, 2018 18:37 pm
  • அ+ அ-

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2018-19ம் நிதிஆண்டு பிறக்கிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அது என்வென்று தெரிந்து கொள்ளலாம்

பங்குவர்த்தகத்தில் புதியவரி

நீண்டகால முதலீட்டு லாபத்தின் அடிப்படையில் ஒரு ஒரு லட்சத்துக்கு பங்குகளை வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கும் முறை இந்த நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. கடந்த நிதியாண்டுவரை, பரஸ்பர நிதி, பங்குகள் ஆகியவற்றில் ஒரு லட்சத்துக்கு முதலீடு செய்திருந்தால், வரி இல்லை. ஆனால், இந்த நிதியாண்டில் இருந்து ரூ.ஒருலட்சத்துக்கு மேல் பங்குகள், பரஸ்பர நிதியில் முதலீடு செய்திருந்தால் அதற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். கடந்த 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.

நிலையான கழிவுத்திட்டம்

வருமானவரி செலுத்துபவர்களுக்கு நிலையான கழிவுத்திட்டம் இந்த நிதிஆண்டு முதல் அமலாகிறது. அதாவது, ரூ.40 ஆயிரம் வரை நிலையான கழிவு எடுத்துக்கொள்ளலாம். இதற்கு முன் மருத்துவச் செலவுக்கு ரூ.15,000, போக்குவரத்து செலவு ரூ.19,200 வரை செலவு செய்து வருமானவரி செலுத்தும் போது கணக்கு காட்டிக்கொள்ளலாம். அதற்கு பதிலாக நிலையான கழிவுத்திட்டம் அமலாகிறது.

செஸ் அதிகரிப்பு

வருமானவரி செலுத்துவர்கள் இந்த ஆண்டு முதல் முதல் செஸ்வரி(கூடுதல்வரி)3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வருமானம் இருப்பவர்கள் ரூ. 2,625 வரியாகவும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருப்பவர்கள் ரூ.1,125, ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.125 வரி செலுத்த வேண்டும்.

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்களைப் பொருத்தவரை அவர்கள் வட்டி மூலம் பெறும் வருமானத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு டிடிஎஸ் ஏதும் பிடிக்கப்படாது. 80டி விதியின் கீழ் மருத்துவச் செலவு, உடல்நலக்காப்பீடு ஆகியவற்றில் கழிவு ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறுதொழில்முனைவோர்களுக்கு

ஆண்டுக்கு ரூ.250 கோடிவரை விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு கார்ப்பரேட்வரி 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 99 சதவீத நிறுவனங்கள் இதன்கீழ் வந்துவிட்டன.

வாகனஓட்டிகள்…

ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடுமுழுவதும் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. மொத்தவிலை பணவீக்கத்தின் அடிப்படையில் 5 சதவீதம் முதல் 7சதவீதம் முதல் கட்டண உயர்வு அமலாகிறது.



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close